Sunday 23 April 2023

உலக புத்தக தினம்

புத்தகம் !

புத்தகம் எனும் புதையலை பற்றி என் மனம் நினைப்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைகின்றேன்.

இது கதையா இல்லை கவிதையா என்றெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியவில்லை, ஏதோ ஒன்று என் தனி,மனதின்கண் பட்டக் கருத்து,

புத்தகத்தை நேசிக்கும் ஒருவனாக,  புத்தக வாசிப்பின் வாசகனாக, புத்தகத்தின் அன்பில் நனைந்த காதலனாக, இந்த உலக புத்தக தினத்தன்று அதைப் பற்றி சில வரிகள்,

கோடை விடுமுறை

கோடை மாணவர்களின் திறன்களை வளர்க்கும் மேடை

கோடை விடுமுறை காலத்தில்  மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சில ஆலோசனைகள்,




















    

*சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் ஆரோக்கியம் குறைபாடு ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருப்பதால் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உணவுடன் பழங்கள்,  நீர் சத்து உள்ள காய்கறிகள் எடுத்துக்கொள்ளவும். 

*தண்ணீர் அடிக்கடி குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும். பாட்டில்களில் அடைத்த குளிர்பானங்களை அருந்துவதை தவிர்க்கவும் 

*குழந்தைகள் வெளியில் சென்று விளையாட காலையும் மாலையும் அனுமதிக்கவும். வெயில் அதிகம் உள்ள மதிய வேளையில் வீட்டில் இருப்பது நல்லது 

*செல்போனில் அதிக நேரம் மாணவர்கள் செலவிடுவதை தவிர்த்து ஆக்கபூர்வமாக கோடை விடுமுறையை பயன்படுத்த வேண்டும். 

*மாணவர்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள அவர்கள் விரும்பும் ஓவியம்,கணிதம், ஆங்கிலம், யோகா, இசை, பரதம்,நீச்சல் விளையாட்டு போன்ற தனித் திறமை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு  வழிவகை செய்யவும் 

*தினமும் மாணவர்களுடன் பெற்றோர்கள் கலந்துரையாடி கதை சொல்லி மற்றும் விளையாடி நேரம்  செலவு செய்வது மாணவர்களின் ஆளுமை திறன், மற்றும் நம்பிக்கையை அதிகரிக்க உதவும். 

*மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதும் எழுதும் திறனை  வளர்ப்பதும் மிகவும் முக்கியம். செய்தித்தாள் வாசிக்க மற்றும் செய்தி கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது எதிர்காலத்தில் மாணவர்கள் உயர்ந்த பதவி செல்லும் தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

* பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் தனித் திறமையை கண்டறிந்து அதை வளர்க்க இந்த கோடை விடுமுறையை பயன்படுத்தி அவர்களை வெற்றியாளராக, இந்த சமுதாயத்தில் வலம்வர உதவ வேண்டும்.

நன்றி

திங் ஓஎஸ் கல்வி நிறுவனம்.

திறமை

பெற்றோர்கள் குழந்தைகளின் திறமைக்கு முக்கியதுவம் தரவேண்டும்.











 

இந்த பிரபஞ்சத்தின் அற்புத படைப்பில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு அற்புதமான, ஒரு தனித்துவமான திறமையை பெற்றிருக்கிறார்கள். அவர்களின் திறமையை கண்டறிந்து அந்த திறமையின் வழியில் வழி நடத்தி அவர்களை மேம்படுத்தினால் மிகப்பெரிய சாதனையாளர்களாக அவர்களை உருவாக்க முடியும்.  பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளின் படிபப்பிற்கு தரும் முக்கியதுவம் திறமைக்கு தருவதில்லை.

குழந்தைகள் கல்வியில் மட்டுமல்ல கலையிலும் சிறந்து விளங்க வேண்டும் ஒரு கலை ஒரு நாட்டை கடந்து உலகத்தை கடந்து வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்தது,அப்படி கலைகளில் சிறந்து விளங்க மாணவர்களை கடந்த பத்து வருடங்களாக  மாணவர்களின் திறமைகளை கண்டறிவதிலும் மாணவர்களின் திறமையை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது நமது திங் ஓஎஸ் பள்ளி. மேலூர் பேங் ரோட்டில் அமைந்துள்ள திங்க் ஒ எஸ் ஆர்ட் அண்ட் கிராப்ட் கல்வி நிறுவனம் மாணவர்களுக்கு













கணினி,அபாகஸ், வேதிக் மேக்ஸ், ஸ்போக்கன் இங்கிலீஷ்,பிரைன் யோகா, மெமரி ட்ரைனிங், 20க்கும் மேற்பட்ட ஓவிய பயிற்சிகள், கேலிகிராபி,எழுத்து பயிற்சி,வாசிப்பு பயிற்சி, நடனப்பயிற்சி,செஸ்,சயின்ஸ் பிராஜக்ட், 2 முதல் 6வயது குழந்தைகளுக்கான பிளே ஸ்கூல், டேக் கேர், குழந்தைகளுக்கான டியூஷன், குழந்தைகளின் மூளை திறன்களை மேம்படுத்தும் 












 

 ஸ்கில் டெவலப்மெண்ட் ப்ரோக்ராம், மெண்டல் மேக்ஸ் டெவலப்மெண்ட் ப்ரோக்ராம், பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் ப்ரோக்ராம் போன்ற பல துறைகளில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.


 








 


 

குழந்தைகளின் எதிர்காலம்=தனித்திறமை.

நன்றி.


காற்றுடன் காதல்!

காற்றே! நீ எப்படி இருக்கிறாய்?  காற்றே! நீ எங்கு இருக்கிறாய்?  காற்றே!  நேற்று?,நீ... என் காதில் பட்டு கீதமானாய்..! என் இதயத்துட...