Wednesday, 27 December 2023

காற்றுடன் காதல்!

காற்றே! நீ
எப்படி இருக்கிறாய்? 

காற்றே! நீ
எங்கு இருக்கிறாய்? 
காற்றே! 
நேற்று?,நீ...
என் காதில் பட்டு கீதமானாய்..!
என் இதயத்துடன் இணைந்து இணக்கமானாய்! 
என் மேனியில் பட்டு இதமான  தென்றலானாய்..!  

காற்றே! 
இன்றோ?
சட்டென்று,
தூசிகளை முகத்தில்
வாரி இறைத்து விட்டு 
என் கண்களை கலங்க செய்துவிட்டாய்..!

வருத்ததில் மூழ்கிவிட்டேன்!

காற்றே! 
பரவாயில்லை, என்வருத்தம் உண்மை இல்லை என்றுதான் நினைக்கின்றேன்..!

காற்றே! 
ஏன் என்கிறாயா? 

காற்றே! நீ..
என்றுமே..
ஆம் என்றுமே...
இறுதி வரை, 
என் உயிரில் நுழைந்து மூச்சுகாற்றானாய்..! காற்றே...!

No comments:

Post a Comment

“நான் + நீ = நாம் interpretation of love

புரிதலும் விட்டுக் கொடுத்தலும் தான் கணவன் மனைவி உறவின் அடித்தளம் நான்… நீ… நாமாகும் தருணம்-2 திருமணம் ஒரு சாதாரண உறவு அல்ல. அது ரத்த உறவு அல...