Tuesday, 24 February 2026

Episode 1: ஒரே நாள். ஒரே தொழில். இரண்டு பாதைகள்.

#LifeLesson

Business School – Episode #1

Episode 1: ஒரே நாள். ஒரே தொழில். இரண்டு பாதைகள்.

இது கதை இல்லை. இது வாழ்க்கை. இது வாழ்ந்த வரலாறு.




அன்று காலை, அதே மார்க்கெட்டில் இரண்டு விதமான கூட்டம்.

ஒரு கடை முன்னாடி,
சாமான்கள் பெட்டிக்குள்ள போய்க்கிட்டிருந்தது. கடையின் பெயர் பலகை
(Name board /போர்டு) இறக்கப்பட்டது.
ஷட்டர் மெதுவா கீழே வந்தது.

அதே நேரத்தில், அதே தெருவின் இன்னொரு பக்கம்,
மாலை கட்டி இருந்தாங்க.
விளக்குகள் எரிஞ்சுது.
பேனர் கட்டிக்கிட்டு இருந்தாங்க.
“Grand Opening”ன்னு பெரிய எழுத்துல.

ஒரே தொழில்.
ஒரே நாள்.

ஒருத்தர் அந்த business-ஐ மூடிட்டு போறார்.
இன்னொருத்தர் அதே business-ஐ அடுத்த லெவலுக்கு கொண்டு போக தயாராக இருக்கார்.

இது இரண்டு பேரோட கதை இல்லை.
இது ஒரே business எடுத்த இரண்டு முடிவுகளோட கதை.

அந்த இரண்டு பேரோட பெயர்?

ஒருத்தர் — சின்ன ராமசாமி.
இன்னொருத்தர் — பெரிய ராமசாமி.

ரெண்டு பேரும் ஒரே பெயர் தான்.
ஆனா, ரெண்டு பேரோட மனநிலை (Mindset / மனநிலை) வேற.


சின்ன ராமசாமி: “இதுக்கு மேல என்னால முடியாதுனு மனச விட்டுட்டார்” பிசினஸ  நிறுத்திட்டார்.

சின்ன ராமசாமி இந்த பிசினஸ்(business) ஆரம்பிச்ச 5 வருஷமா படாத பாடு பட்டுட்டார். ஒரு கடினமா உழைச்சாரு எல்லா வேலையும் அவரே இழுத்து போட்டு செஞ்சார். தொழில் ஆரம்பிக்கும் போது சேர்த்து வைத்திருந்த பணத்தை எல்லாம் போட்டும்,பத்தாதுன்னு வீட்டு மேல கடன வாங்கி ஆரம்பிச்சாரு.
 
சொந்த பணம் +அதிக கடன் (Loan).
 
“முதல்ல ஓடட்டும்… அப்புறம் பார்த்துக்கலாம்”ன்னு ஆரம்பிச்சார்.
ஆரம்பத்துல எல்லாம் சரியா தான் போச்சு.

ஆனா, தினந்தினம்(daily )
மெதுமெதுவா:

செலவுகள் (Expenses ) அதிகமாச்சு

மாத தவணை (EMI ) கட்றது சிரமம் ஆச்சு 

பண ஓட்டம் (Cash flow) tight ஆச்சு

அதோட சேர்ந்து,
தூக்கம் கெட்டுச்சு,
சரியான தூக்கம் இல்லை.
உடல் ஆரோக்கியம் (Health ) போக ஆரம்பிச்சது.
நிம்மதியா சாப்பிட நேரம் இல்லை.
மன அழுத்தம் (Stress ),இந்தப் பிரச்சனை கடையோட நிக்கல, வீட்டுக்குள்ளேயும் போச்சு,
ஒரேடியா நிம்மதி போச்சு  .

அன்று, ஷட்டர் மூடும்போது, அவர் மெதுவா சொன்னார்:

“Business என்னைக் கொல்லக் கூடாது…
“இதுக்கு மேல அவரால முடியாதுனு மனச விட்டுட்டார்” நிறுத்திட்டார்.


அவர் “profit இல்ல”ன்னு சொல்லல.
அவர் சொன்னது:
“என்னால இந்த வாழ்க்கை முறை (Lifestyle / லைஃப்ஸ்டைல்) இனிமேல் முடியாது.”

அன்று அவர் கடையை மூடினார்.
Business-ஐ விட்டு வெளியே வந்தார்

அதே நாள்… 

பெரிய ராமசாமி: “இதை இன்னும் பெரியதா பிராண்டா build பண்ணலாம்” உருவாக்குனார்


அதே business.
அதே line.

ஆனா, பெரிய ராமசாமி இந்த 5 வருஷத்துல வியாபார நிறை குறைகல, மார்க்கெட் நிலவரத்தை ஆராய்சாரு, கொஞ்சம் ஸ்மார்ட்டா(smart) யோசிச்சாரு, அதை சின்ன கடையா பார்க்கல.
அவர் ஒவ்வொரு நாளும்
ஒரு பெரிய showroom மாதிரி,
ஒரு next level branch மாதிரி,
அதை open பண்ணின மாதிரி கற்பனை செஞ்சாரு.

அவர் அணுகுமுறை (Approach) வேற.

முதல்ல முதலீட்டு திட்டம் (Capital planning).
பணம் எங்க எங்க போகணும்னு clear-ஆ பிரிச்சார்:

•கடை அமைப்பு (Interiors / உள்ளமைப்பு)

•பொருட்கள் கையிருப்பு (Inventory / ஸ்டாக்)

•விளம்பரம் (Marketing / மார்க்கெட்டிங்)

•தினசரி செலவுகள் (Working capital / நடப்பு செலவுகள்)

•சொந்த பணம் + திட்டமிட்ட கடன் (Structured loan ).

“முதல் 1–2 வருஷம் லாபம் இல்லாம போனாலும் பரவாயில்ல”ன்னு மனதளவில் தயாரானார்.

அவர் ஒரு விஷயம் clear-ஆ தெரிஞ்சுக்கிட்டார்:

முதல் சில வருஷம், வந்த பணத்தை business-க்குள்ளேயே மீண்டும் முதலீடு (Reinvestment ) செஞ்சாரு,

அதோட சேர்த்து,
உடல் ஆரோக்கியம் (Health / ஹெல்த்) compromise பண்ணக்கூடாதுனு முடிவு  செஞ்சு தினமும் ஒரு மணி நேரம் உடம்புக்கு ஒதுக்குனார்.

ஏன்னா அவர் நம்பினார்:
“சுவர் இருந்தால்தான் சித்திரம்.
உடல் இருந்தால்தான் தொழில்.”

ஒரே நாள். ஒரே தொழில். இரண்டு எதிர்மாறான முடிவுகள்.

ஒருத்தருக்கு,
அதே business — முடிவு.
இன்னொருத்தருக்கு,
அதே business — அடுத்த லெவல் தொடக்கம்.

வித்தியாசம் தொழிலில் இல்ல.
வித்தியாசம் அதை பார்க்குற மனநிலையில இருக்கு.

Entrepreneurs-க்கு Episode 1 சொல்லுற 5 simple உண்மைகள்:

1.Planning (திட்டமிடல்) இல்லாம growth risky.

2.Reinvestment (மீண்டும் முதலீடு) இல்லாம next level வராது.

3.Cash flow (பண ஓட்டம்) ignore பண்ணினா stress unavoidable.

4.Health (ஆரோக்கியம்) கெட்டா, business முடிவுகளும் கெடும்.

5.Business long-term journey; short-term pressure-க்கு life burn பண்ணாதீங்க.

முடிவு:

இது கதையல்ல.இது வாழ்க்கை.
நம்ம தினமும் பார்க்குற, வாழுற வரலாறு.

ஒரே நாள்.
ஒரே தொழில்.
ஒருத்தருக்கு அது சுமை.
இன்னொருத்தருக்கு அது புதிய தொடக்கம், புதிய வாய்ப்பு.

முடிவ நிர்ணயிக்கிறது கடைசியா இதுதான்:
மனநிலை. திட்டம். பொறுமை. ஆரோக்கியம்.

— Mr Thinker 💛❤️

Think. Feel. Build.
 
கொஞ்சம் யோசிங்க..

#MrThinkerBlogger
#Episode1
#இது_கதை_இல்லை
#வாழ்க்கை
#வாழ்ந்த_வரலாறு
#EntrepreneurLife
#BusinessMindset
#HealthIsWealth
#Reinvestment
#LongTermVision
#TamilBusiness
#RealStories

Sunday, 22 February 2026

"Lighten the bag,Free the mind"

பள்ளிப்பை மட்டும் அல்ல… குழந்தைகளின் மன சுமையையும் இறக்குவோம்

சுமையாகத் தெரியும் கல்வியை மகிழ்ச்சியான கற்றலாக மாற்றும் நேரம்




பள்ளி செல்லும் குழந்தைகளை கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா?

  சின்ன சின்ன உடம்புகள்… ஆனால் முதுகில் பெரிய பெரிய பைகள்.
 பொதிமூட்டையை முதுகில் சுமந்து மிகப்பெரிய மலையை ஏறுவது போல் பள்ளி செல்லும் காட்சியை, பெரியவர்களால் கூட தூக்க முடியாத பைகளை,சிறு வயது முதலே அந்த சுமையை தூக்கி தூக்கி பழகிய அவர்களுக்கு சுமை முதுகில் மட்டுமல்ல கல்வியும் சுமை(Hard) என்ற எண்ணத்தை அவர்களுக்குள் விதைத்திருக்கிறது.

அந்த பைகள் புத்தகங்களால் மட்டும் நிரம்பியவை அல்ல —
அதில் அழுத்தம், பயம், எதிர்பார்ப்பு, மதிப்பெண் சுமை எல்லாமே நிறைந்திருக்கிறது.

மனதில் ஒரு கேள்வி எழுகிறது:

“கல்வி குழந்தைகளுக்கு சுமையாக இருக்க வேண்டுமா?
அல்லது,அது மகிழ்ச்சியான பயணமாக இருக்க வேண்டாமா?”

Thursday, 19 February 2026

Are Elders a Burden or Our Roots?

“நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?”

 முன்னேற்றம் என்ற பெயரில் மனிதநேயத்தை இழந்து கொண்டிருக்கும் சமூகத்தின் மீது ஒரு திறந்த கேள்வி.

ஒரு வீட்டில் எழுபது அல்லது எண்பது வயதான ஒரு பெரியவர் இருந்தால்…


அவர் அந்த வீட்டின் ஆசீர்வாதமா?அல்லது பாரமா?

இந்த கேள்வி என்னை சில நாட்களாக அமைதியாக இருக்க விடவில்லை.

நாம் வாழும் இந்த காலம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?

நாம் எதை முன்னேற்றம் என்று அழைக்கிறோம்?

பணமா? பதவியா? சுகவாசமா?

அல்லது மனிதநேயமா?

குடும்பத்தின் மையம் – கீழே உள்ள தலைமுறையா? மேலே உள்ள தலைமுறையா?

இன்று பெரும்பாலான குடும்பங்களில் நாம் காணும் ஒரு நிலை என்னவென்றால் –

நம் குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் அன்பு, மரியாதை, பாதுகாப்பு…

அதே அளவு நம் பெற்றோருக்கு கிடைக்கிறதா?

குழந்தைகளை கடவுளாகக் கருதும் நாம்,

நம்மை உருவாக்கியவர்களை ஏன் சாதாரண மனிதர்களாகவே பார்க்கிறோம்?

ஒரு முறை கொரிய நாட்டை சேர்ந்த என் நண்பர் ஒருவர் – என் வீட்டிற்கு வருகை தந்திருந்தார்  வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை கால் தடுமாறி கீழே சாதாரணமாக விழுந்தது,அதை பார்த்தவுடன் அனைவரும் பதட்டமடித்துக் கொண்டு தூக்க ஓடினார்கள். அப்பொழுது அவர் சொன்னார்,“

 "எங்கள் நாட்டில் மேலே உள்ள தலைமுறையை(பெரியவர்கள்)நாங்கள் அதிக அன்பும் அக்கறையும் கொண்டு கவனிப்போம். கீழே உள்ள தலைமுறைகள் (குழந்தை) அதைப் பார்த்து வளர்வார்கள்,ஆனால் இங்கே தலை கீழாக நடப்பது போல் தோன்றுகிறது.”என்று

அந்த வார்த்தைகள் என் மனதை அழுத்தியது, ஏனென்றால் அது உண்மை.

முதியோர் இல்லங்கள் – முன்னேற்றமா? அல்லது மனசாட்சி கேள்வியா?

இன்று நாம் பெருமையாகச் சொல்கிறோம் –

“முதியோர் இல்லங்கள் இருக்கின்றன… வசதிகள் இருக்கின்றன…”

Pros (சாதகங்கள்):

 •தனிமையில் இருக்கும் பெரியவர்களுக்கு பாதுகாப்பான இடம்.

 •மருத்துவ வசதி, உணவு, பராமரிப்பு.

 •குழந்தைகள் வெளிநாட்டில் அல்லது வேலையால் தங்க முடியாத சூழ்நிலையில் ஒரு ஆதரவு அமைப்பு.

Cons (பாதகங்கள்):

 •குடும்ப பாசம் இல்லாத வாழ்க்கை.

 •“நான் தேவையற்றவன்” என்ற மன உளைச்சல்.

 •தலைமுறை இடைவெளி அதிகரிப்பு.

 •குழந்தைகள் “பெரியவர்களைப் பார்த்துக் கொள்வது அவசியமில்லை” என்ற மனப்பான்மையுடன் வளர்வு.

நாம் விதைப்பது – நாமே அறுப்போமா?

ஒரு குடும்பத்தில் பெற்றோருக்கு மரியாதை இல்லாத சூழலில் வளர்ந்த குழந்தை,

நாளை தன் பெற்றோரை எப்படி நடத்தும்?

நாம் இன்று நம் பெற்றோர்களை அலட்சியம் செய்தால்,

நாளை நம் குழந்தைகள் அதையே கற்றுக் கொள்ள மாட்டார்களா?

நாம் சொல்லிக் கொடுக்காமல் கற்றுக் கொடுக்கிறோம்.

நாம் பேசாமல் பழக்கப்படுத்துகிறோம்.

நாம் செயலில் விதைப்பது, நாளை நம் வாழ்க்கையில் விளையும்.

இந்திய மண் -மதிப்பும் மரியாதை மிகுந்த மண்

ஒரு காலத்தில் இந்தியா பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்த நாடாக இருந்தது.

“மாதா, பிதா, குரு, தெய்வம்” என்ற ஒழுக்கம்

இன்று “நான், என் குடும்பம், என் சுகம்” என்ற சுயநலமாக மாறிவிட்டதா?

முன்னேற்றம் என்ற பெயரில்

நாம் மனிதநேயத்தை இழந்துவிட்டோமா?

எதிர்கால சந்ததிகளின் வளர்ச்சி

இன்று நம் குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள்?

  •பெற்றோரின் தியாகத்தை மதிக்காத வாழ்க்கை.

   •வசதிக்கு முக்கியத்துவம், உறவுக்கு இல்லை.

   •வயது ஒரு பாரம் என்ற எண்ணம்.

இதன் விளைவு:

உணர்ச்சி குறைந்த சமூக அமைப்பு.

தனிமை அதிகரிப்பு.

குடும்பம் என்ற அமைப்பு பலவீனமாகும்.

முதியவர்களின் அனுபவ அறிவு சமூகத்தில் இழக்கப்படும்.

அப்படியென்றால்… நாம் என்ன செய்ய வேண்டும்?

  1.குழந்தைகளுக்கு பெரியவர்களின் மதிப்பை நடைமுறையில் காட்ட வேண்டும்.

  2.வாரத்திற்கு ஒரு நாள் பெற்றோருடன் நேரம் செலவிட வேண்டும்.

  3.பெரியவர்களின் அனுபவத்தை குடும்ப முடிவுகளில் பயன்படுத்த வேண்டும்.

4.“பாசம் ஒரு பொறுப்பு” என்பதை உணர்த்த வேண்டும்.

இறுதி கேள்வி…

நாம் ஒரு நாள் அந்த வயதுக்கு செல்வோம்.

அப்போது நம்மை யார் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம்?

அதேபோல இன்றே நாம் நடந்து கொள்ளத் தயாரா?

இந்த உலகம் மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு முன்

நம் வீடு மாற வேண்டும்.

நம் மனசாட்சி மாற வேண்டும்.

“பெரியவர்கள் ஒரு பாரமல்ல…அவர்கள் நம் வாழ்க்கையின் வேர்கள்.”

வேர்களை வெட்டிக் கொண்டு நிழல் தேடும் சமூகமாக நாம் மாற வேண்டுமா?

அல்லது வேர்களை காத்து என்றென்றும் வளர்ச்சியை உணரும் சமூகமாக இருக்க வேண்டுமா?

தீர்மானம் நம்முடையது.

_Mr. Thinker💛

—  

MR. THINKER – Reflection Series #01

Think Deep. Live Responsible.  

#MrThinker #ReflectionSeries #FamilyValues #GenerationalResponsibility #HumanDevelopment

Next time:

MR. THINKER – Reflection #02

Topic: Are We Raising Strong Children or Emotionally Dependent Adults?



Wednesday, 18 February 2026

“நான் + நீ = நாம் | Common Interest Marriage Secret” ரகசியம்!

 👩‍❤‍💋‍👨"இரு துருவங்களை இணைக்கும் ஒற்றைப் புள்ளி: தம்பதியருக்கான 'ரசனை' மந்திரம்!"

Mr. Thinker  சிந்தனை பதிவு

“Happy Indian couple creating common hobby together for strong marriage”



இன்றைய வேகமான வாழ்க்கையில், கணவன்–மனைவி இடையே சண்டைகள் வருவது அசாதாரணமல்ல.

ஆனால் அந்தச் சண்டை, கருத்து வேறுபாட்டிலிருந்து “ஈகோ”வாக மாறி, “இணைவு”விலிருந்து “இடைவெளி”யாக மாறும் போது தான் உறவு தளரத் தொடங்குகிறது.

பல தம்பதிகளை கவனித்த ஒரு கவுன்சிலராக (counselor) நான் ஒரு முக்கியமான விஷயத்தை கவனித்தேன்:

ஒரு ஆணுக்கு தனி குணம், தனி விருப்பம், தனி ஹாபி இருக்கும்.

ஒரு பெண்ணுக்கும் அவளுக்கே உரிய உலகம் இருக்கும்.

இருவரும் வேறுபட்டவர்கள் — அதுதான் இயற்கை. அந்த வேறுபாட்டை மாற்ற முயற்சிப்பது உறவை சிரமப்படுத்தும்; ஆனால் அதை புரிந்து கொள்ள முயற்சிப்பது உறவை அழகாக்கும்.

அவன் அவளின் ஆர்வத்தை சப்போர்ட் பண்ணட்டும்.

அவள் அவனின் கனவுகளை ஊக்குவிக்கட்டும்.

நம்ம வாழ்க்கையில் சண்டை இல்லாத வீடு எதுவும் இல்லை.

ஆனால் பிரச்சனை சண்டை அல்ல.

பிரச்சனை என்ன தெரியுமா?

👉 "சண்டையை விட பெரிய ஒன்றை அவர்கள் சேர்ந்து உருவாக்கவில்லை" என்பதுதான்.

இருவருக்கும் சேர்ந்து ஒரு காமன் ஹாபி உருவானால் —

அங்கே தான் “நான்” மற்றும் “நீ” சேர்ந்து “நாம்” ஆகிறது.

அந்த பொதுவான விருப்பம் ஒரு பொழுதுபோக்கு அல்ல…

அது உறவை இணைக்கும் பாலம். 💛

👉 ஒரு பொதுவான “சேர்ந்து செய்யும் ஆர்வம்” (like hobby)இருக்கும் ஜோடிகள் — எவ்வளவு சண்டை இருந்தாலும் — உடைந்து போக மாட்டார்கள்.

இருவருக்கும் இடையில் அது ஒரு“பாலமாக” அமையும்போது, எந்த இடைவெளியும் நிரந்தரமில்லை.

அந்தப் பாலம் தான் common Hobby, Shared Interest ( common interest ).

❤️ ஏன் பொதுவான ஹாபி முக்கியம்?

ஒரு உறவு பேசுவதால் மட்டும் நீடிக்காது,அது அனுபவங்களால் நீடிக்கும்.

🎵 சேர்ந்து பாடுவது

🍳 சேர்ந்து சமையல் செய்வது

🎨 சேர்ந்து பெயிண்டிங் செய்வது

💃🕺சேர்ந்து டான்ஸ் ஆடுவது

✈️ சேர்ந்து பயணம் செய்வது

🎡சேர்ந்து ஒரு கலை கற்றுக்கொள்வது

📸 சேர்ந்து Instagram ரீல்ஸ் எடுப்பது

🎥  YouTube வீடியோக்கள் 

💭 சேர்ந்து உருவாக்கும் "லட்சியக் கனவு"

🎤 மியூசிக், கலை, கைவினை, தோட்டம், etc,

இவை வெறும் “ஹாபி” அல்ல, உறவை மீண்டும் இணைக்கும் ரப்பர் பேண்ட்.

💡 பொதுவான ஆர்வம் என்ன செய்யும்?

🧠 மன அழுத்தத்தை குறைக்கும்.

❤️ ஈகோவை கரைக்கும்.

🤝 “நாம் ஒரு டீம்” என்ற உணர்வை தரும்.

😊 சண்டைக்குப் பிறகும் மீண்டும் பேசத் தூண்டும்.

💬 உரையாடலை இயல்பாக உருவாக்கும்.

🎨 1. மௌனத்தை உடைக்கும் கலை

சண்டை வந்தால் என்ன நடக்கும்?

வார்த்தைகள் குறையும்.

அமைதி பெரிதாகும்.

அமைதி வெறுப்பாக மாறும்.

ஆனால், இருவரும் சேர்ந்து ஒரு செயலில் ஈடுபட்டால் — (சமையல், பெயிண்டிங், தோட்டம், வேலை)…

அங்கே வார்த்தைகளை விட செயல் பேசும்.

ஒரு மணி நேரம் பிரியாணி சமைக்கும் போது,

“உப்பு கொஞ்சம் கம்மி…” என்று சொல்லும் அந்தச் சின்ன உரையாடல்

பல நாள் மௌனத்தை உடைக்கும் திறன் கொண்டது.

சில நேரங்களில், சமையல் தான் சிகிச்சை.

சில நேரங்களில், ஒரு தூரிகை தான் தீர்வு.

🎤 2. ரசனையில் கரையும் ஈகோ

இணைந்து பாடுவது வெறும் பொழுதுபோக்கு அல்ல.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வது நேரத்தை வீணாக்குவது அல்ல.

அது Teamwork.

ஒரு பாடலை இணைந்து பாடும்போது,

ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்கும் அந்த நொடி —

அங்கே உள்ள கசப்புகள் கரைகின்றன.

“நான்” என்ற ஈகோ

“நாம்” என்ற உணர்வாக மாறும் தருணம் —

அதுதான் உறவின் மறுபிறப்பு.

ஈகோ இருக்கும் இடத்தில் அன்பு தங்கி இருக்காது.

ஆனால், ரசனை இருக்கும் இடத்தில் ஈகோ நீண்ட நேரம் நிலைக்காது.

🚗 3. பயணங்கள் தரும் புதிய புரிதல்

வீட்டுச் சுவர்கள் பிரச்சினைகளை பெரிதாக்கும்.

அதே பிரச்சினைகள் ஒரு கடற்கரையில் நின்றால் சிறியதாகத் தெரியும்.

ஒரு வார இறுதி பயணம்…

ஒரு லாங் டிரைவ்…

ஒரு சின்ன தேநீர் நேர உரையாடல்...

புதிய இடம், புதிய காற்று, புதிய முகங்கள் —

உள்ளிருக்கும் மன அழுத்தத்தை கரைக்கிறது.

அப்போது தான் புரியும்:

“நாம் சண்டை போட்ட விஷயம் இதுக்காகத்தானா?”

சூழல் மாறினால் மனமும் மாறும்.

மனம் மாறினால் உறவும் மலரும்.

🔍 4. இடைவெளி ஏன் உருவாகிறது?

பிரச்சினைகள் பெரியவை அல்ல.

பிரிந்து நிற்பதே பெரிய பிரச்சினை.

“உனக்கு இது பிடிக்கும்.”

“எனக்கு அது பிடிக்கும்.”

இவ்வாறு தனித்தனியாக வாழும்போது,

கணவன் ஒரு தீவு.

மனைவி இன்னொரு தீவு.

இரண்டு தீவுகளுக்கும் நடுவே கடல் —

அதுதான் The Gap.

அந்த இடைவெளியை நிரப்ப ஒரு “பொதுவான புள்ளி” தேவை.



அது தான் ஹாபி:

சேர்ந்து சமூக சேவை செய்வது ஆகலாம்

தோட்டம் வளர்ப்பது ஆகலாம்

உடற்பயிற்சி செய்வது ஆகலாம்

எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

இணைக்கும் ஒரு விஷயம் இருந்தால் போதும்.

🌿 சிந்தனை: Mr thinker's Thought 

திருமணம் என்பது

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது அல்ல;

இருவரும் சேர்ந்து ஒரே திசையை நோக்கிப் பார்ப்பதுதான்.

உங்களுக்குள் எத்தனை சண்டைகள் இருந்தாலும் —

ஒரு Common Interest கண்டுபிடியுங்கள்.

அந்த ஒரு ஹாபி

உங்கள் கசப்புகளை மறந்து

உங்களை மீண்டும் காதலிக்க வைக்கும் மருந்தாக அமையும்.

"தனித்தனியாக வாழ்வது சாதாரணம்.இணைந்து ரசிப்பதே உன்னதம்".

🔔 இன்றே தொடங்குங்கள்

இன்று இரவு உங்கள் துணையிடம் ஒரு கேள்வி கேளுங்கள்:

“நம்ம இருவருக்கும் பிடித்த ஒரு விஷயம் சேர்ந்து தொடங்கலாமா?”

அது சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை.

ஒரு செடியை நட்டாலும் சரி.

ஒரு பாடலை கற்றுக்கொண்டாலும் சரி.

ஒரு சின்ன வீடியோ எடுத்தாலும் சரி.

ஆனால் சேர்ந்து செய்யுங்கள்.

✅ புதிய அனுபவங்களை உருவாக்குங்கள்

✅ சேர்ந்து சிரிக்கும் தருணங்களை உருவாக்குங்கள்

✅ இருவருக்கும் பிடித்த ஒன்றை கண்டுபிடியுங்கள்

—, Mr. Thinker💛✨

“Think Deep. Live Strong. Love Better.”

Follow for more relationship wisdom.

Tuesday, 17 February 2026

AI Revolution 2026: From Chatting to Doing


AI Revolution 2026: From Chatting to Doing – How AI is Transforming Business, Education & Marketing

From Conversation to Creation | From Idea to Impact

Artificial Intelligence (AI) இன்று உலகத்தை மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு டிஜிட்டல் புரட்சி. Chatting இருந்து Doing வரை — AI ஒரு புதிய காலத்தை உருவாக்குகிறது.

ஒரு காலத்தில் Artificial Intelligence (AI) என்பது சினிமாவில் மட்டுமே இருந்த கற்பனை. இன்று அது நம் கையில் இருக்கும் மொபைல் போனிலிருந்து உலகளாவிய வணிக நிறுவனங்கள் வரை எல்லாவற்றிலும் கலந்திருக்கிறது.

🚀 What is Artificial Intelligence?

Artificial Intelligence என்பது மனித சிந்தனை மற்றும் கற்றல் திறன்களை கணினி மூலம் உருவாக்கும் தொழில்நுட்பம்.

இவை அனைத்தும் சேர்ந்து AI-யை ஒரு சக்திவாய்ந்த தொழில்நுட்பமாக மாற்றுகின்றன.


💼 Artificial Intelligence in Business

AI business analytics
ai-business.jpg 

1. Customer Support Automation

AI Chatbots 24/7 வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குகின்றன.

2. Data Analysis

பெரிய அளவிலான data-வை analyze செய்து future sales prediction வழங்குகிறது.

3. Cost Reduction

Automation மூலம் manpower செலவு குறைகிறது.

4. Automation

Repeated வேலைகளை AI செய்யும்போது மனிதர்கள் creative வேலைகளில் கவனம் செலுத்த முடிகிறது.

5. Decision Making

Sales prediction, Risk analysis போன்ற விஷயங்களில் AI மிக துல்லியமான கணிப்புகளை வழங்குகிறது.


🎓 AI in Education

AI in education classroom
ai-education.jpg


1. Personalized Learning

ஒவ்வொரு மாணவரின் திறனை அடிப்படையாகக் கொண்டு தனிப்பட்ட பாடத்திட்டம்.

2. AI Tutors

24 மணி நேரமும் கிடைக்கும் டிஜிட்டல் உதவி.

3. Smart Evaluation

Automatic grading systems மூலம் நேரம் சேமிப்பு.

4. Language & Skill Learning

AI மூலம் புதிய மொழி மற்றும் திறன்களை வேகமாக கற்றுக்கொள்ளலாம்.


📈 AI in Marketing

AI digital marketing strategy
ai-marketing.jpg


1. AI Content Creation

Blog, Ads, Social Media content சில நிமிடங்களில் உருவாக்க முடியும்.

2. Targeted Advertising

Customer behavior அடிப்படையில் personalized ads தனிப்பட்ட விளம்பரங்கள்.

3. SEO Optimization

Keyword research மற்றும் ranking improvement மேம்படுத்த AI உதவுகிறது.

4. Customer Insights

எந்த Product யாருக்கு பிடிக்கும் என்று AI முன்கூட்டியே கணிக்கிறது


👨‍👩‍👧‍👦 AI for Everyone (எல்லோருக்கும் AI)

AI இப்போது பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல.
Freelancers – Content, Design, Editing
Students – Assignments, Research
Housewives – Online Business
Entrepreneurs – Startup Planning
Developers – Coding Assistance


⚠️ Negative Side of Artificial Intelligence

  • Job Displacement – Automation காரணமாக சில வேலைகள் குறையும்.
  • Over Dependency – மனித சிந்தனை குறைய வாய்ப்பு.
  • Fake Content – தவறான தகவல்கள் வேகமாக பரவும்.
  • Privacy Issues – Personal data பாதுகாப்பு முக்கியம்.

🔥 Conclusion: Use AI, Don’t Let AI Use You

Chatting மட்டும் போதாது. Doing தான் வெற்றிக்கு வழி.

Think Smart. Use AI. Grow Beyond Limits.

— Mr. Thinker

சுய-கவனிப்புப் பயணம் (self-care Ride)

சுய கவனிப்பு பயணம் (SELF-CARE TRAVEL).

கடலும், தியானமும்: ஒரு தொழிலதிபரின் சுய-தேடல் பயணம்!

​"சிந்தனை என்பது ஒரு கடல் போன்றது; அது ஆழமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும்."

வணக்கம் நண்பர்களே, 

நான் உங்கள் Mr.Thinker.

​ஒரு பிசினஸ்மேனாக எனது அன்றாட வாழ்க்கை எப்போதுமே திட்டமிடப்பட்டது. எனது "Daily Uniform" போல, என் உழைப்பும் சீரானது. ஆனால், சில நேரங்களில் இயந்திரத்தனமான அந்த ஓட்டத்திலிருந்து விடுபட்டு, இயற்கையோடு உரையாட வேண்டியது அவசியமாகிறது. சமீபத்தில் நான் மேற்கொண்ட இந்த Self-care Ride எனக்குள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

"சிந்தனை"Mr. Thinker's Thoughts:



​அமைதி (Peace): கடற்கரையில் மறையும் அந்தச் சூரியன், ஒரு நாள் முடிவதைக் குறிப்பதல்ல; அடுத்த நாள் ஒரு புதிய தொடக்கத்திற்குத் தயாராவதைக் குறிக்கிறது.

​தெளிவு (Clarity): அலைகளின் சத்தத்திற்கு இடையே அமர்ந்திருப்பது, பிசினஸில் உள்ள சிக்கலான முடிவுகளை எடுக்கத் தேவையான மனத் தெளிவைத் தருகிறது.

​எளிமை (Simplicity): எனது வழக்கமான எளிமையான உடையிலேயே (Uniform) இந்தப் பயணத்தை மேற்கொண்டேன். இது ஆடம்பரத்தை விட அக அமைதியே முக்கியம் என்பதை எனக்கு உணர்த்தியது.

​எனது பிளாக்கிற்கான (Mr Thinker Blogger) சிறகுறிப்பு:


"நாம் ஓடும் வேகத்தை விட, நாம் செல்லும் திசை முக்கியம். அந்தத் திசையைத் தீர்மானிக்க, அவ்வப்போது இப்படிப்பட்ட தனிமை தேவைப்படுகிறது. எனது இந்தச் சுய-கவனிப்பு பயணம், எனது அடுத்த பிசினஸ் மைல்கற்களுக்கு என்னை இன்னும் வலிமையாகத் தயார் செய்துள்ளது."


ஒரு தொழிலதிபரின் "ரீசெட்" (Reset) பட்டன்: சுய-கவனிப்புப் பயணத்தின் அவசியம்!

வாழ்க்கை என்பது ஓயாத ஒரு ஓட்டம். குறிப்பாக ஒரு பிசினஸ்மேனாக, தினமும் முடிவெடுப்பது (Decision Making), வேலையாட்களை நிர்வகிப்பது, லாப-நஷ்ட கணக்குகள் என நம் மூளை எப்போதும் 100 கி.மீ வேகத்தில் ஓடிக்கொண்டே இருக்கும். இந்த ஓட்டத்தில் நாம் தொலைத்துவிடுவது நம்மையேதான்.
​அதனால்தான், அவ்வப்போது ஒரு "Self-care Ride" செல்வது ஆடம்பரமல்ல, அது ஒரு அத்தியாவசியத் தேவை.

ஏன் இந்த ஓய்வு அவசியம்?
​தொடர்ந்து வேலை செய்வது உங்கள் செயல்திறனைக் குறைக்கும். ஒரு போனை எப்படி சார்ஜ் செய்கிறோமோ, அதுபோல நம் மனதையும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஒரு சிறு பயணம் உங்கள் படைப்பாற்றலை (Creativity) அதிகரிக்கும் மற்றும் புதிய வணிக யோசனைகளைத் தரும்.
எனது சுய-கவனிப்புப் பயணத் திட்டம் (The Mr Thinker Plan):
உங்கள் பயணத்தின் முதல் விதி – போனை தள்ளி வைப்பது. ஒரு தொழிலதிபராக அழைப்புகளைத் தவிர்ப்பது கடினம் தான், ஆனால் 24 மணிநேரம் உலகத்திலிருந்து துண்டிக்கப்படுவது உங்கள் மனதிற்கு எல்லையற்ற அமைதியைத் தரும்.
3. அட்டவணை இல்லாத நாட்கள்:
பிசினஸில் நாம் நேரத்தைப் பின்பற்றுவோம் (Deadlines). ஆனால் இந்தப் பயணத்தில் எந்த நேரக்கட்டுப்பாடும் வேண்டாம். எப்போது தோன்றுகிறதோ அப்போது எழுந்திருங்கள், பிடித்ததைச் சாப்பிடுங்கள், அமைதியாக நடைப்பயணம் செல்லுங்கள்.
பயணத்தில் செய்ய வேண்டியவை (To-do List):




புத்தக வாசிப்பு: உங்களுக்குப் பிடித்த ஒரு தத்துவப் புத்தகத்தையோ அல்லது சுயசரிதையையோ வாசியுங்கள்.

சுய-சிந்தனை (Journaling): ஒரு டைரியை எடுத்து உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். கடந்த மாதங்களில் நீங்கள் அடைந்த வெற்றிகள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்களை அதில் பதியுங்கள்.

இயற்கை உணவு: உள்ளூர் உணவுகளையும், உடலுக்குப் புத்துணர்ச்சி தரும் இயற்கை பானங்களையும் அருந்துங்கள்.

முடிவுரை:
​பயணம் முடிந்து நீங்கள் திரும்பும்போது, அதே மனிதராகத் திரும்ப மாட்டீர்கள். தெளிவான சிந்தனை, புத்துணர்ச்சியான உடல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்துடன் திரும்புவீர்கள்.

​"சிறந்த உழைப்பிற்கு, சிறந்த ஓய்வு அவசியம்!"



​உங்கள் அடுத்த பயணத்திற்குத் தயாராகுங்கள். உங்கள் மனமே உங்கள் மிகப்பெரிய சொத்து, அதைப் பாதுகாப்பது உங்கள் கடமை!



​#MrThinker #SelfCareRide #BusinessMindset #MelurEntrepreneur #MentalPeace #KannanArjunaraja


Friday, 13 February 2026

The unheard symphony

​🎼 கேட்காத இசையும்... தீராத தேடலும்!

​உலகில் உள்ள அத்தனை இசையையும் கேட்டு ரசிக்க நம் ஆயுட்காலம் போதாது. இது ஒரு கசப்பான உண்மை போலத் தெரிந்தாலும், இதில் தான் வாழ்வின் உன்னதமான தத்துவம் ஒளிந்திருக்கிறது.



​🧠 உளவியல் பார்வை: (The Psychological Aspect)

​இன்றைய டிஜிட்டல் உலகில் எதையும் இழந்துவிடக் கூடாது என்ற பதற்றம் (FOMO - Fear of Missing Out) நமக்குள் இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும் நுகர வேண்டும் என்ற வேகம், நம்மிடம் இருக்கும் ஒரு சில அழகான விஷயங்களை ரசிக்க விடாமல் தடுத்துவிடுகிறது. "எல்லா இசையையும் கேட்க முடியாது" என்பதை ஏற்றுக்கொள்வதே மன அமைதிக்கான முதல் படி.

​🏛️ தத்துவப் பார்வை: (The Philosophical Aspect)

​கடல் போன்ற இவ்வுலக இசையில், நம் காதுகளுக்குக் கிடைப்பது ஒரு சில துளிகளே.

  • தேர்வு செய்வதே அழகு: எல்லாவற்றையும் கேட்பதை விட, நமக்குப்பிடித்த ஒரு சில ராகங்களை மீண்டும் மீண்டும் ரசிப்பதே நம் ரசனையை செதுக்குகிறது.
  • எல்லைகளே மதிப்பு: ஒரு விஷயம் முடிவற்றதாக இருக்கும்போது தான், அதிலிருந்து நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு சிலவற்றுக்கு அதிக மதிப்பு கிடைக்கிறது.
"உலகிலுள்ள அனைத்து இசையையும் கேட்டு ரசிக்க நம் ஆயுள் போதாது என்பது நிதர்சனம். ஆனால், கேட்க முடியாத இசையை எண்ணி வருந்துவதை விட, கேட்கக் கிடைத்த ஒரு சில ராகங்களை ஆழமாக ரசிப்பதே வாழ்க்கை.

​✨ முடிவுரை:

​"நாம் கேட்கத் தவறிய லட்சக்கணக்கான பாடல்களில் நம் வாழ்க்கை அடங்கியிருக்கவில்லை; நம் இதயத்திற்கு நெருக்கமாக நாம் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த ஒரு சில மெட்டுக்களில் தான் நம் வாழ்வின் லயம் இருக்கிறது."

இழப்பது குறையல்ல; 

தேர்ந்தெடுப்பதே கலை! 🎶"

Missing out is not a loss; 

choosing wisely is an art! 🎶"


"Philosophical Thought "

 இந்தப் பதிவு இசையை பற்றியது மட்டுமல்ல, யோசியுங்கள்!

சேவையின் தரம் = வாழ்க்கைத் தரம்= நிலையான வளர்ச்சி


"வளமான தமிழ்நாடு" (prosperous Tamilnadu)

இது ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் மகிழ்ச்சி மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்தைக் குறிக்கும் ஒரு சொல்லாகும்.

நிலையான வளர்ச்சி: 

ற்காலிக உதவி vs நிரந்தர மாற்றம்

​ஒரு குடிமகனின் வாழ்க்கைத் தரத்தை (Standard of Life) உயர்த்துவதற்கு, கையில் கொடுக்கும் பணத்தை விட, அரசு பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் நவீனப்படுத்துவதே சிறந்த தீர்வாகும்...


1.பழைய பள்ளிகளை மேம்படுத்துதல் (Old Schools vs Cash)

​அரசு வழங்கும் இந்த 5,000 ரூபாயை பழைய பள்ளிக் கட்டிடங்களைப் புதுப்பிக்கவும், நவீன வசதிகளை உருவாக்கவும் பயன்படுத்தினால்:

திறன் மேம்பாடு: ஒருமுறை கிடைக்கும் 5,000 ரூபாயை விட, ஒரு மாணவனுக்கு நவீன ஆய்வகம் அல்லது கணினிப் பயிற்சி கிடைத்தால், அவன் மாதத்திற்கு 30,000 ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கும் தகுதியைப் பெறுவான். இதுவே நிரந்தரமான வாழ்க்கைத் தர உயர்வு.

தனியார் பள்ளி மோகம் குறையும்: அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்தால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் தங்கள் பணத்தைத் தனியார் பள்ளிகளுக்குக் கொடுப்பது தவிர்க்கப்படும். இது அவர்களுக்கு ஒரு பெரிய சேமிப்பாக அமையும்.

​2. பழைய மருத்துவமனைகளை நவீனப்படுத்துதல் (Old Hospitals vs Cash)

​மருத்துவச் செலவுகள்தான் ஒரு குடும்பத்தை வறுமைக்குத் தள்ளும் முக்கியக் காரணி:

தரமான சிகிச்சை: பழைய அரசு மருத்துவமனைகளில் நவீன ஸ்கேன் (Scan) மற்றும் பரிசோதனை வசதிகள் இருந்தால், ஒரு சாதாரண குடிமகன் தனியார் மருத்துவமனைக்குச் சென்று கடனாளியாக வேண்டிய அவசியம் இருக்காது.

உழைக்கும் வர்க்கத்தின் ஆரோக்கியம்: சிறந்த மருத்துவக் கட்டமைப்பு இருந்தால், மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆரோக்கியமான மக்கள் இருக்கும் மாநிலமே பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும்.

​3. குடிமகனின் கண்ணியம் (Empowerment vs Dependency)

​மக்களை அரசின் உதவியையே எதிர்பார்த்து இருக்கச் செய்வதற்கும் (Dependency), அவர்களைச் சொந்தக் காலில் நிற்க வைப்பதற்கும் (Empowerment) பெரிய வித்தியாசம் உள்ளது:

​தற்சார்பு: உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் சுகாதாரத்தை அரசு வழங்கினால், ஒரு குடிமகன் தன் சொந்த முயற்சியால் முன்னேற முடியும். இதுவே ஒரு சமூகத்திற்கு கௌரவத்தைத் தரும்.

​பொருளாதாரப் பார்வை (The Business View)

​ஒரு மாநிலம் தனது வருமானத்தைப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற "மூலதனச் செலவுகளில்" (Capital Expenditure) முதலீடு செய்யாமல், வெறும் இலவசங்களுக்கு மட்டும் செலவு செய்தால்:

​கடன் சுமை அதிகரிக்கும்: தமிழகத்தின் கடன் சுமை ஏற்கனவே 9 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இந்த இலவசப் பணத்திற்கான வட்டியை வருங்காலத் தலைமுறையினர்தான் செலுத்த வேண்டியிருக்கும்.

​விலைவாசி உயர்வு: உற்பத்தி அதிகரிக்காமல் சந்தையில் அதிகப் பணப்புழக்கம் ஏற்பட்டால், அது அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்த வழிவகுக்கும்.

பணியாளர்களின் தரம்: பழைய பள்ளிகள் நவீன தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டுடன் புதுப்பிக்கப்படாவிட்டால், இன்னும் 10 ஆண்டுகளில் நமது தொழில்களுக்குத் தேவையான திறமையான பணியாளர்களை எங்கிருந்து பெறுவோம்?

நிதிப் பொறுப்பு: இதுபோன்ற இலவசத் திட்டங்களுக்காக மாநிலத்தின் கடன் சுமை அதிகரிக்கும் போது, எதிர்காலத்தில் அரசு அதைச் சரிசெய்ய தொழில்கள் மீதான வரிகளை (GST/சொத்து வரி/தொழில் வரி) உயர்த்துமா?

சேவையின் தரம் = வாழ்க்கைத் தரம்

​"கொடுக்கும் ₹5,000 ஒரு மாதம் உதவும். ஆனால், நவீனப்படுத்தப்பட்ட அரசுப் பள்ளியும், மருத்துவமனையும் ஒரு தலைமுறையையே மாற்றும். ஒரு குடிமகனின் உண்மையான வளர்ச்சி என்பது தற்காலிகப் பணப் பரிமாற்றத்தில் இல்லை; அது தரமான கட்டமைப்பில்தான் உள்ளது. ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டுமென்றால், நாம் அவர்களின் வங்கி இருப்புக்கு முன்னால், அவர்களுக்குக் கிடைக்கும் சேவையின் தரத்தை உயர்த்த வேண்டும்."

முடிவு: "சேவையின் தரத்தை" (Standard of Service) உயர்த்துவதே ஒவ்வொரு குடிமகனின் "வாழ்க்கைத் தரத்தை" உயர்த்துவதற்கான ஒரே வழி. ஒரு ஸ்மார்ட் பள்ளியோ அல்லது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையோ 30 ஆண்டுகளுக்குப் பலன் தரும்; ஆனால் ரொக்கப் பணம் 30 நாட்களுக்கு மட்டுமே உதவும்.

Thursday, 12 February 2026

MONEY IS FREE


MONEY IS FREE - we create new concept

Aura Invesmart: "பணம் இலவசம்" - ஒரு புதிய பார்வை,,


கருப்பொருள்: "தடையற்ற பண ஓட்டம்" (The Free Flow Philosophy)

​இந்தத் தத்துவத்தின்படி, பணம் என்பது உங்கள் வாழ்நாளைக் கொடுத்து வாங்கும் ஒன்றல்ல; மாறாக, சரியான அமைப்பின் (System) மூலம் உருவாக்கப்படும் ஒரு புதுப்பிக்கத்தக்க வளமாகும். ஒருமுறை அந்த அமைப்பை உருவாக்கிவிட்டால், அது ஈட்டித் தரும் வருமானம் "இலவசம்". ஏனெனில், அதை ஈட்ட உங்கள் உழைப்பு மீண்டும் தேவைப்படுவதில்லை.

​விரிவான உள்ளடக்க அமைப்பு (Detailed Content Structure)

​1. கவனத்தை ஈர்க்கும் தொடக்கம்: வழக்கமான சிந்தனையை மாற்றுதல்

​கருத்து: உங்களிடம் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற சொத்து உங்கள் "நேரம்". அந்த நேரத்தைக் கொடுத்துதான் நீங்கள் பணத்தை "வாங்குகிறீர்கள்" என்பதை மக்களுக்கு உணர்த்துங்கள்.

​மாற்றம்: ஆனால், Aura Invesmart-இல் நாங்கள் பணத்தை இலவசமாகக் கருதுகிறோம். அதாவது, உங்கள் கடின உழைப்பால் அல்லாமல், உங்களின் புத்திசாலித்தனமான முதலீட்டுத் திட்டங்களால் பணம் உங்களைத் தேடி வர வேண்டும்.

​2. "இலவச" பணத்தின் மூன்று தூண்கள்

​அறிவே திறவுகோல் (Knowledge is Key): செல்வத்தைப் பெருக்குவதற்கான தகவல்கள் இன்று அனைவருக்கும் கிடைக்கின்றன. இந்த டிஜிட்டல் யுகத்தில் "எப்படி முதலீடு செய்வது" என்ற அறிவு இலவசம்; அதைச் செயல்படுத்தும் ஒழுக்கம் மட்டுமே உங்களுக்குத் தேவை.

​கூட்டு வட்டியே இயந்திரம் (Compounding is the Engine): நீங்கள் முதலீடு செய்யும்போது, உங்கள் பணம் பல மடங்காகப் பெருகும். இந்த வளர்ச்சிதான் "இலவசப் பணம்". ஏனெனில், இதற்காக நீங்கள் ஒரு நிமிடம் கூட கூடுதல் 

​தானியங்கி முறையே வாகனம் (Automation is the Vehicle): SIP அல்லது தானியங்கி முதலீட்டு முறைகளை (Automated Portfolios) அமைப்பதன் மூலம், "எப்போது, எப்படி முதலீடு செய்வது" என்ற மன அழுத்தத்தை நீங்கள் குறைக்கலாம்.

​3. உணர்வுப்பூர்வமான வேண்டுகோள் (The Emotional Appeal)

​"பணம் எப்போது உங்கள் மன அமைதியையோ, குடும்ப நேரத்தையோ அல்லது உங்கள் ஆரோக்கியத்தையோ விலையாகக் கேட்கவில்லையோ, அப்போதுதான் அது உண்மையான இலவசப் பணம்."

நன்றி 

கண்ணன் அர்ஜுனராஜா 

"War and peace"

 "வன்முறைக்கு எதிரான மனிதனின் குரல், மனிதன் மனிதத்தை மறந்துவிட்டான்". இந்த பூமி ஏற்கனவே எண்ணற்ற வன்முறைகளைக் கண்டுவிட்டது. எத்தனைய...