Sunday, 15 March 2026

"War and peace"

 "வன்முறைக்கு எதிரான மனிதனின் குரல், மனிதன் மனிதத்தை மறந்துவிட்டான்".

இந்த பூமி ஏற்கனவே எண்ணற்ற வன்முறைகளைக் கண்டுவிட்டது. எத்தனையோ போர்கள் நடந்துவிட்டன. எத்தனையோ உயிர்கள் அழிந்துவிட்டன.



ஆனாலும், உலகின் எங்காவது “போர்”, “வன்முறை”, “அழிவு” என்ற வார்த்தைகள் கேட்கும்போதெல்லாம் மனம் அதிர்ச்சியடைவது இயல்பாகி விட்டது.

ஆனால் ஒரு கேள்வி நம்மை தொடர்ந்து துரத்துகிறது.

இவ்வளவு அனுபவங்களையும், இவ்வளவு வரலாறுகளையும், இவ்வளவு துயரங்களையும் கடந்த பிறகும், ஏன் மனிதனுக்குள் இன்னும் வன்முறை உயிரோடு இருக்கிறது?


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரக்கம் இருக்கிறது.அதே நேரத்தில், காயம் பெற்ற கோபமும் இருக்கிறது.அன்பும் இருக்கிறது.ஆனால் தீராத வெறுப்பும் சில நேரங்களில் உள்ளே பதுங்கிக் கிடக்கிறது.

அந்த வெறுப்பு வெளிப்படாத போது மனிதன் மனிதனாக இருக்கிறான்.

அது வெளிப்படும் போது குடும்பங்கள் உடைகின்றன; உறவுகள் சிதைகின்றன; சமூகங்கள் பிரிகின்றன; நாடுகள் கூட போர்க்களமாகி விடுகின்றன.

இன்று உலகின் பல பகுதிகளில் நடக்கும் மோதல்கள் இதற்கே சாட்சி.


இரு மனிதர்களுக்கிடையிலான சண்டை,

இரு குடும்பங்களுக்கிடையிலான பகை,

இரு சமூகங்களுக்கிடையிலான வெறுப்பு,

இரு நாடுகளுக்கிடையிலான போர் —


இவை எல்லாவற்றிற்கும் வேராக இருப்பது ஒரே விஷயம்:

"மனிதன் மனித்தை மறந்துவிட்டான்"

இன்றைய உலகில் மனிதன் மனிதத்திற்காக வாழ்வதில்லை.


சொத்துக்காக ஓடுகிறான்.

பதவிக்காக போராடுகிறான்.

அதிகாரத்திற்காக எரிகிறான்.

பணம், புகழ், பாதுகாப்பு, ஆதிக்கம் — இவற்றிற்காக அவன் அளவில்லாமல் ஆசைப்படுகிறான்.


அவனுக்குக் கிடைத்தது போதாது. இன்னும் வேண்டும். மற்றவரிடமிருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக அழிக்கவும் தயங்கவில்லை.

ஒரு உயிரை சுடுவது இவ்வளவு எளிதாக எப்படி மாறிவிட்டது?

ஒரு மனிதனின் கண்ணீரை பார்க்காமல் இருப்பது ஏன் இவ்வளவு சாதாரணமாகிவிட்டது?

இது தான் நம் காலத்தின் மிகப் பெரிய துயரம்.

“எதிர்காலத்தைப் பற்றி இவ்வளவு கவலைப்பட வேண்டுமா?” என்று யாராவது கேட்கலாம்.

ஆமாம்,நம் வாழ்க்கையைப் பற்றிய கவலையை விட அதிகமாக நம் குழந்தைகளின் வாழ்க்கையைப் பற்றிய கவலை இருக்கிறது.

ஏனெனில் அவர்கள் இந்த உலகத்தில்தான் நாளை வாழப்போகிறார்கள்.

அவர்களின் குழந்தைகளும் இந்த பூமியில்தான் வாழப்போகிறார்கள்.

நாம் இன்று அமைதியாக இருந்தாலும், நாளை அமைதி இருக்கும் என யார் உறுதி தர முடியும்?

நாம் இன்று சிரித்தாலும், நாளை சிரிக்கக் கூடிய உலகம் இருக்கும் என யார் சொல்ல முடியும்?

மனிதகுலம் எதிர்கொள்ளப் போகும் பிரச்சினைகள் ஏராளம். குடிக்க தண்ணீர் இல்லாத காலம் வரலாம். பொருளாதார சீர்கேடுகள் அதிகரிக்கலாம். சுற்றுச்சூழல் மாசுபாடு பெருகலாம். பனிப்பாறைகள் உருகலாம். காலநிலை மாறலாம். இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கலாம்.

இந்த எல்லாவற்றையும் தாண்டி, மனிதன் தானே உருவாக்கிக் கொண்டிருக்கும் இன்னொரு பெரிய பேரழிவு — வன்முறை.


இயற்கை கொடுக்கும் துயரங்களை சமாளிக்க மனிதன் கற்றுக்கொள்ளலாம்.

ஆனால் மனிதன் மனிதனுக்கே துன்பம் கொடுக்கும் நிலையை எப்படி சமாளிப்பது? அது உலகின் மிகப் பெரிய அழிவாகிவிடும்.


வாழ்க்கை என்பது வெறுப்பதற்காக கிடைத்ததல்ல.

வாழ்க்கை என்பது வெல்வதற்காக மட்டுமல்ல.

"வாழ்க்கை என்பது வாழ்வதற்காக,.

மற்றவரையும் வாழ விடுவதற்காக".


அன்புபை விதைப்பதற்காக,

இரக்கம் காட்டுவதற்காக,

அமைதியை உருவாக்குவதற்காக தவிர அழிவை அல்ல.

இன்று உலகத்துக்கு மிகவும் தேவைப்படுவது புதிய ஆயுதங்கள் அல்ல.

புதிய அரசியல் கோஷங்கள் அல்ல.

புதிய பகைகள் அல்ல.

மனித மனங்களில் மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் மனிதம் தான்.


வன்முறைக்கு பதில் இரக்கம் வர வேண்டும்.

வெறுப்புக்கு பதில் புரிதலாக மாற வேண்டும்.

போருக்கு பதில் பேச்சு வார்த்தையில் தீர்வு காண வேண்டும்.

அழிவுக்கு பதில் அன்பு மலர வேண்டும்.

விட்டுக் கொடுத்து நியாயத்திற்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும்.

அப்போதுதான் நம் குழந்தைகள் பயமின்றி வாழும் உலகம் உருவாகும்.

அப்போதுதான் இந்த பூமி உண்மையாக மனிதர்களுக்கான பூமியாகும்.

நாம் இப்போது எதை விதைக்கிறோமோ, நாளை நம் பிள்ளைகள் அதையே அறுப்பார்கள்.

அதனால் வன்முறையை விதைக்க வேண்டாம்.

அமைதியை விதைப்போம்.

வெறுப்பை வளர்க்க வேண்டாம்.

மனிதத்தை வளர்ப்போம்.

ஏனெனில் இந்த உலகம் நமக்குப் பிறகு நம் குழந்தைகளுக்குரியது.

_Mr. Thinker ❤️💛

 War and peace 

#war_and_Peace #iran_isreal

 #chinna_america #violence #Humanity 

#save_people #mrthinker #Mr_Thinker

Monday, 9 March 2026

Champions inspire young minds.

 🇮🇳 History Creates Champions. Champions Create History.

Champions inspire young minds.

“ஒரு Trophy… ஒரு தலைமுறையின் கனவு”



08/03/2026 அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில்.

இந்திய அணி உலகக் கோப்பையை உயர்த்திய அந்த நொடியில்…

அது ஒரு வரலாறு.

ஸ்டேடியம் முழுக்க சத்தம்.

கைகளில் தேசிய கொடிகள்.

கண்களில் மகிழ்ச்சி.

crowd-ல இருந்த சிறுவர்கள் .

அவர்கள் அந்த தருணத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அது ஒரு தலைமுறையின் நினைவாக மாறும்.

அந்த stadium மட்டுமல்ல,நாடு முழுக்க மகிழ்ச்சிதாண்டவம்.

அது வெறும் trophy அல்ல.

அது விடாமுயற்சியின் வெற்றி.

🏆 Champion ஆகுறது ஒரு நாளில் நடக்காது

Final match-ல் தான் trophy கிடைக்கும். ஆனா champion அங்கே உருவாக மாட்டான்.

Champion உருவாகுற இடம்:

• கனவு கானும் தைரியம்.                                  • காலையில் practice ground                            • தோல்விக்கு பிறகு silent training                • காயம் இருந்தாலும் மீண்டும் எழுந்து நிற்கும் அந்த மனநிலை

ஒரு champion-ஐ உருவாக்குறது             ஒரு match இல்லை.                       ஆயிரம் நாள் discipline.

🔥 தோல்வியை fuel ஆ மாற்றுறவர்கள் தான் Champion

சாதாரண மனிதன் தோல்வியை நினைவில் வைத்துக்கொள்வான்.

Champion என்ன பண்ணுவான் தெரியுமா?

அந்த தோல்வியை                  எரிபொருளா மாற்றுவான்.

அவன் கேட்கும் ஒரு கேள்வி மட்டும்:

“Next time நான் எப்படி better ஆக முடியும்?”

அந்த கேள்விதான் champion-ஐ உருவாக்கும்.

👦 சிறுவர்கள் என்ன பார்க்கிறார்கள்?

சிறுவர்கள் இந்த celebration-ஐ பார்க்கும் போது…

அவன் ஒரு cricket match'ஆ மட்டும் பார்க்கவில்லை.

அவன் பார்க்கிறான்:

• கனவு                                                                    • உழைப்பு                                                              • ஒற்றுமை                                                            • விடாமுயற்சி

அவன் மனதில் ஒரு விதை விழுகிறது.

“நானும் ஒரு நாள் இப்படித்தான் ஜெயிக்கணும்.”

அதுதான் Champion footprint.

🌱 Champions ஒரு தலைமுறையை உருவாக்குகிறார்கள்

ஒரு champion வெற்றி பெறுவது

அவருக்காக மட்டும் அல்ல.

அவர் தெரியாமலே

ஆயிரம் குழந்தைகளின் கனவுகளை உருவாக்குகிறார்.

ஒரு குழந்தை bat எடுக்கிறது.

ஒரு மாணவன் discipline கற்றுக்கொள்கிறான்.

ஒரு entrepreneur விடாமுயற்சி கற்றுக்கொள்கிறான்.

அதுதான் champion impact.

🧠 Mr. Thinker Insight

Champions வெற்றி பெறுவதற்கு talent மட்டும் போதுமா?

அவர்கள்:

• Discipline                                                              • Consistency                                                          • Teamwork                                                            • Mental Strength                                                  • Never Give Up Mindset

இதால்தான் champion ஆகிறார்கள்.

🎯 இந்த வெற்றியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

1️⃣ Dream without fear

பெரிய கனவு காண்பது முதல் படி.

2️⃣ Discipline daily

Daily routine தான் success-ஐ build பண்ணும்.

3️⃣ Team matters

ஒரு champion team-ல தான் உருவாகிறான்.

4️⃣ Failure is training

தோல்வி lesson தான்.

5️⃣ Never stop believing

நம்பிக்கை விடாதீர்கள்.

🇮🇳 ஒரு நாட்டின் பெருமை


அந்த trophy உயர்த்திய அந்த தருணம்…

அது ஒரு celebration மட்டும் இல்லை.

அது ஒரு message:

“இந்த நாட்டில் கனவு காண்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.”

🏁 முடிவு

Champions inspire young minds.

ஒரு champion-ஐ பார்த்து

ஒரு குழந்தை dream பண்ண ஆரம்பித்தால்…

அந்த champion

அந்த trophy-வை விட பெரிய வெற்றி அடைந்துவிட்டான்

Think like a champion.                            Work like a champion.                                Live like a champion

— Mr. Thinker ❤️💛

Think. Feel. Build.



#TeamIndia                      #WorldCupChampions        #ChampionMindset                          #MrThinker                                      #YoungMinds                                      #DreamBig                                    #NeverGiveUp                                  #Inspiration                            #FutureChampions                    #ThinkFeelBuild

Sunday, 1 March 2026

Episode 2 : "உனக்குள்ளே எரியுற தீ. அது வைரம்— வைராகியம்".

 #LifeLesson

Business School – Episode #2

Episode 2:  "உனக்குள்ளே எரியுற தீ. அது வைரம்— வைராகியம்".

இது கதை இல்லை. இது வாழ்க்கை. இது வாழ்ந்த வரலாறு.



Episode 1-ல் நாம் பார்த்தோம் —

ஒரே தொழில். ஒரே நாள். இரண்டு பாதைகள்.

இன்று…

ஒரே மனிதன். இரண்டு மரியாதை.

ஒரே ஊர். ஒரே காலம்.

ஆனா இரண்டு விதமான உள்ளம்.

🧍‍♂️ சின்ன ராமசாமி — காரணம் தேடுபவன்

 "தினமும் அவனுக்கு அவமானப்பட்டு அவமானப்பட்டு பழகிப்போச்சு,
அவன் உள்ளே இருந்த வைராக்கியத்தீ..
மெல்ல அனஞ்சிச்சுபோச்சு".

 எதுக்கெடுத்தாலும் கோபப்படுறது
பிறகு அந்த கோபம் சோகமா மாறுறது 
பிறகு அது மனச்சோர்வா ஆகிறதுனு வாடிக்கையாச்சு .

பெரும்பாலும்“என்ன செய்யறது … என் வாழ்க்கை இப்படித்தானு நொந்துக்குவான் .”

ஒரு வேலைய முடிக்க முயற்சி செய்யாம காலம் கடத்தி,ஏன் செய்யலன்றதுக்கும் காரணம் சொல்லுவான்.

தோல்விக்கு சூழ்நிலையை blame பண்ணுவான்.

விமர்சனம் வந்தா உடனே உடைஞ்சு  போவான்.

அவமானம் வந்தா ஒளிஞ்சுக்கிடுவான்.

அவனுக்கு மரியாதை  வேணும்னு ஆசைப்படுவான், ஆனா அந்த மரியாதைக்காண  தகுதிய உருவாக்க முயற்சி செய்யமாட்டான்.

அவன் தினமும் சொல்லுவான்:    “என்னை யாரும் மதிக்கலை…”

ஆனா அவன் தன்னையே மதிக்க ஆரம்பிச்சதே இல்லை.

🔥 பெரிய ராமசாமி — வலியை வைராகியமாக மாற்றியவன்

பெரிய ராமசாமிக்கும் வாழ்க்கை எளிதாக இருக்கல.

ஒரு நாள்…

அனைவருக்கும் முன்னால் அவனை அவமானப்படுத்தினார்கள்.

“உன்னால எதுவும் ஆகாது.”

அந்த வார்த்தை அவனை உடைக்கல.  அது அவனை உருவாக்குச்சு. அவன் ஓடல, ஒளியல.

அவன் ஒத்துக்கிட்டான்:

“ஆம்மா… இப்போ நான் பலவீனமாதான் இருகேனு, புருஞ்சுகிட்டான்.

ஆனா நான் வலிமையா மாறாம விடமாட்டேனு.”உறுதி எடுத்தான்.

அந்த நாளிலிருந்து அவன் இந்த மூணு விஷயத்தை விடாம முயற்சி பண்ணான்.

•அவமானத்தை மறக்கல. அந்த அவமானத்த அவன இயக்குற  வைராக்கிய சக்தியா மாத்துனான்.

•தன் பலவீனத்தை ஒத்துக்கிட்டான் .

•தினமும் 1% முன்னேற்றம் அடையணும்னு ஒவ்வொரு நாளும் முயற்சி செஞ்சான்.

வலி → வைராகியம்

வைராகியம் → ஒழுக்கம்

ஒழுக்கம் → மரியாதை

🥀 ஒரு நாள்…

சின்ன ராமசாமி பெரிய ராமசாமியிடம் கேட்டான்:

“எப்படி உனக்கு இவ்வளவு மரியாதை கிடைச்சது?”

பெரிய ராமசாமி அமைதியா சொன்னான்:

“நான் மரியாதை கேக்கல. நான் என்னை உருவாக்கினேன். உலகம் அதை பார்த்து மரியாதை தந்தது.”

🧠 Business Lesson 

👉 வைராகியம் இல்லாதவன் காரணம் தேடுவான்.

👉 வைராகியம் உள்ளவன் தீர்வு தேடுவான்.

👉 அவமானம் பலரை உடைக்குது.

👉 வைராகியம் சிலரை உருவாக்குது.



"பிசினஸ் தொடங்கின ஆரம்பத்துல பெரும்பாலான தொழில் முனைவோர் சந்திக்கிற பிரச்சனைய,அவமானத்த,வலிய, வேதனைய, யார் ஒருத்தரால வைராக்கியமா மாத்த முடியுதோ, வைராக்கிய தீய அணைய விடாம பாத்துக்க முடியுதோ அவங்களால இந்த போராட்டம் மட்டுமில்ல வாழ்க்கையில எந்த போராட்டம்னாலும் சாதிச்சு காட்டுவாங்க".

ஒரு அவமானம்…                                          ஒரு வார்த்தை…                                            ஒரு தருணம்…

அது சிலரை அமைதியா உடைக்குது.  சிலரை அமைதியா உருவாக்குது.

உன்னை தாழ்த்திய தருணம் —              அது முடிவல்ல..

அதை எரிபொருளா மாத்துற சக்திதான் வைராகியம்.

உள்ளுக்குள் எரியுற தீ🔥.

அதை அணைத்தவன் — மறைந்தான்.  அதை காத்தவன் — நிலைத்தான்.      அதை பெரிதாக்கினவன் — உயர்ந்தான்.

வித்தியாசம்?

 "உனக்குள்ளே எரியுற தீ.                    அது வைரம்— வைராகியம்".


🏆முடிவு

காலம் சென்றது.

சின்ன ராமசாமி —

இன்னும் காரணம் சொல்லிக்கொண்டே இருந்தான்.

பெரிய ராமசாமி —

தன் வலியை வைராகியமாக மாற்றி,தன் வாழ்க்கையை செதுக்கிக்கொண்டான்.

ஒரே அவமானம். ஒரே வலி.

ஒருத்தருக்கு அது முடிவு. இன்னொருத்தருக்கு அது தொடக்கம்...

🎯 “உன்னை உலகம் மதிக்கணும்னா, முதலில் நீ உன்னை செதுக்கு.”

— Mr. Thinker 💛❤️

Think. Feel. Build.

கொஞ்சம் யோசிங்க..

#MrThinkerBlogger #BusinessSchool #LifeLesson #Mindset #Vairagyam#SelfRespect #EntrepreneurLife #TamilBusiness #RealStories #ThinkFeelBuild #இது_கதை_இல்லை #வாழ்க்கை #வாழ்ந்த_வரலாறு

"War and peace"

 "வன்முறைக்கு எதிரான மனிதனின் குரல், மனிதன் மனிதத்தை மறந்துவிட்டான்". இந்த பூமி ஏற்கனவே எண்ணற்ற வன்முறைகளைக் கண்டுவிட்டது. எத்தனைய...