Wednesday, 27 December 2023

காற்றுடன் காதல்!

காற்றே! நீ
எப்படி இருக்கிறாய்? 

காற்றே! நீ
எங்கு இருக்கிறாய்? 
காற்றே! 
நேற்று?,நீ...
என் காதில் பட்டு கீதமானாய்..!
என் இதயத்துடன் இணைந்து இணக்கமானாய்! 
என் மேனியில் பட்டு இதமான  தென்றலானாய்..!  

காற்றே! 
இன்றோ?
சட்டென்று,
தூசிகளை முகத்தில்
வாரி இறைத்து விட்டு 
என் கண்களை கலங்க செய்துவிட்டாய்..!

வருத்ததில் மூழ்கிவிட்டேன்!

காற்றே! 
பரவாயில்லை, என்வருத்தம் உண்மை இல்லை என்றுதான் நினைக்கின்றேன்..!

காற்றே! 
ஏன் என்கிறாயா? 

காற்றே! நீ..
என்றுமே..
ஆம் என்றுமே...
இறுதி வரை, 
என் உயிரில் நுழைந்து மூச்சுகாற்றானாய்..! காற்றே...!

Monday, 18 December 2023

இதயத்துடிப்பு

உள்ளத்திலே நீ  இருக்க...! 
உன் நினைப்பில் நானிருக்க...!
வண்ணநிலவின் வெளிச்சத்தில் எண்ணம் ஒளிர்ந்திருக்க...!
மகிழ்ச்சியிலே மனம் திளைக்க...!
என் அழகே, உன்னை எப்போது பார்பேன் என என்கண்கள் காத்திருக்க..! 
என் இதயம் உன் இதயத்தை இணைக்க ஏங்குதடி...! 
அந்த அதிசயம் நிகழ்த்த என்னுடல் ஆலிங்கனம் பாடுதடி ..!
                          - கண்ணன்.

கடைக்கண் காதலின் கடல்!

ஓரக்கண்ணால் பார்பாயே..!
பார்த்தாயா?

அந்த ஒரு நொடி
கண்ணில் இடரி உன் இதயத்தினுள் நுழைவேனே..! ஓரக்கண்ணால் பார்த்தாயா? 
அந்த கனிவும் கருணையும் நிறைந்த இதயத்தினுள் நனைவேனே...!
ஓரக்கண்ணால் பார்த்தாயா?

நான் எங்கும் கண்டிராத ஆச்சரிங்களின் நடுவே பறப்பேனே..!
ஓரக்கண்ணால் பார்த்தாயா?

அந்த ஆனந்த அதிசயத்தின் ஊடே  அழகாய்
மிதப்பேனே..!
ஓரக்கண்ணால் பார்த்தாயா?
      -கண்ணன்.

காற்றுடன் காதல்!

காற்றே! நீ எப்படி இருக்கிறாய்?  காற்றே! நீ எங்கு இருக்கிறாய்?  காற்றே!  நேற்று?,நீ... என் காதில் பட்டு கீதமானாய்..! என் இதயத்துட...